Saturday, February 12, 2011

லவ்பேட்ஸ்.. லவ்பேட்ஸ்.. .



 

ஏய் உனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம வினோத் இன்னும் ரெண்டு ஜோடி லவ்பேட்ஸ் வாங்கி நம்ம கூட இங்க விட போறாணாம்.  க்ஷாலு இது உனக்கு எப்படி தெரியும். 
டே நீ தூங்கிட்டு இருக்கும்போது அவனோட லவ்வர் க்ஷாலுட்ட அவன் பேசிட்டு இருந்தத நான் கேட்டே ன்.
அப்படினா இன்னும் ரெண்டு க்ஷாலு ரெண்டு வினோத் இங்க வரப்போறாங்கன்னு சொல்லு.
ம் ஆமா.
ஆஹா, வரப்போற ரெண்டு ஃபிகர்ல எது நல்ல ஃபிகரா இருக்கோ அத பாத்து பேசி மடக்கி கரெக்ட் பண்ணிட வேண்டியதுதான், இவளோட முஞ்சியவே ஒரு மாசமா பார்த்து போர்ரடிச்சிடிச்சு.
ஏய் வினோ நான் சொன்னதுக்கு ஒண்ணும் சொல்லாம நீ ஏதோ யோசனை  பண்ணிட்டு இருக்க.
ஒ அதுவா பாவம் அவங்களும் நம்மள மாதிரி இங்க வந்து மாட்டப்போறாங்களேண்ணு வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.
டே, 'நீ என்னா நெனச்சு இருப்பன்னு எனக்கு தெரியும்.' இல்ல க்ஷாலுமா உம்மேல சத்தியமா நான் இததான் நெனச்சிட்டு இருந்தேன்.



சரி சரி நான் கூட அவனையும் அவன் லவ்வரையும் இது மதிரி எல்லா வசதியும் உள்ள ஒரு ரூம்ல அடைச்சு வச்சி வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் போடனும் ஆன வெளியேவே விட கூடாதுன்னு அவங்களுக்கு சாபம் விட்டுட்டு இருந்தேன்.
ஏய் க்ஷாலு முதல்ல அங்க வச்சிருகிற மினரல் வாட்டர்ல உன் வாய கழுவு. ஏன்டா அப்படி சொல்லுற?
அப்புறம்மென்ன் சாபம் விடுறதுக்கு பதிலா நல்ல வரம்ல அவங்களுக்காக கடவுள்ட்ட கேட்டிருக்க. 
எப்படிடா?
க்ஷாலு இந்த மனுக்ஷ பசங்கள பத்தி உனக்கு சரியா தெரியல, வசதியான ரூம்ல அடைச்சு வச்சு மூனு வேளையும் சாப்பாடு போட்டாலே போதும் வேற எதையும் பத்தி கவலைப்படாம அங்கயேதான் இருப்பாங்க, அதுலையும் அவங்க லவ்வரையும் அங்க விட்டுட்டா முடிஞ்சுது கதை. நீ கால்ல விழுந்து வெளிய போக சொன்னாலும் போக மாட்டாங்க. அப்போஅவங்களுக்கு இது வரம்தானே. 
ஏன் வினோத் அவங்களுக்கு வெளியிலபோயி சுதந்திரமா இருக்க் பிடிக்காதா?
க்ஷாலு அது அப்படி இல்ல, அவங்களுக்கு வெளியில போயி வேலை செய்து  சாப்பிடுறத விட உட்கார்ந்த இடத்துலயே எலலாம் கிடைக்கிறததான் விரும்புவாங்க.
ஏன் வேலைணா அவங்களுக்கு அவ்வளோ கக்ஷ்ட்டமா? 
ஆமா இதோ இங்க நம்ம பத்தி பதிவு எழுதி இருக்கானே இவன் கூட வேலை செய்ய அலுப்பு பட்டுகிட்டுதான் இதெல்லாம் எழுதிகிட்டு இருக்கான். இத படிக்கிற மத்தவங்களும் அப்படிதான்.

"மக்கா இத படிக்கிற யாராவது லவ்பேட்ஸ் வச்சிருந்த பறக்க விட்ருங்க இல்லண்ணா உங்களுக்கும்
இப்படிதான் சாபம் கிடைக்கும்."  

No comments:

Post a Comment