வலியும் இனிக்குமா? என்றால் காதலில் இனிக்கும். காத்திருப்பதும், காக்கவைப்பதும், தொடுவதும், தொடநினைப்பதும், கெஞ்சுவதும், மிஞ்சுவதும் என எத்தனை எத்தனை இனிய வலிகள். மறக்ககூடாதென நினைக்கும் எத்தனையோ விசயங்களை உடனே மறந்துவிடுகிறேன். ஆனால் உன்னோடு இருந்த தருணங்களின் ஒவ்வொரு கணமும் என் இதய துடிப்போடு சேர்ந்தல்லவா துடித்துக்கொண்டிருக்கின்றன. இதுதான் காதலோ! இதன் உணர்வுகளை புரிந்து கொள்ள உள்ளிறங்குகையில் அதில் புதைந்தல்லவா போய்விடுகிறேன்.
"உன்னிடம் தோற்கவே நானும்
என்னிடம் தோற்கவே நீயும்
விளையாடுகிறோம்
இறுதியில் விளையாட்டல்லவா தோற்று போகின்றது"...
"மழையில் நனைவது மகிழ்ச்சி என நீ நினைக்கிறாய்
உன்னை நனைப்பதுதான் மகிழ்ச்சி என மழை நினைக்கிறது.
இதை காணும் எனக்கல்லவா மகிழ்ச்சி"...
காதலர் தின வாழ்த்துகளுடன்
Ismail.mkm

No comments:
Post a Comment