Saturday, February 19, 2011

உடல் பருமனை குறைக்க

 
உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு பரம்பரை மற்றும் ஹார்மோன் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும்  மூலகாரணமாக இருப்பது உணவுமுறை மற்றும் உடற்பயிற்ச்சியின்மையினால்  கொழுப்பு சத்து உடலில் அதிக அளவில் தேங்கிவிடுவதுதான்.

இன்றைய சூழ்நிலையில் அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் கணிணி முன்பாக 10மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய நேரிடுகிறது. வீட்டிற்கு வந்த
பின்பும் தொலைகாட்சி மற்றும் இணையம் போன்றவற்றில் அமர்ந்து விடுகின்றனர்.  இதனால் உடல் ரீதியான்  உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விடுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கும நவீன உபகரங்களின் வருகையினாலும், அவர்கள் அதிகமாக தொலைகாட்சிமுன்பு அமர்ந்து விடுவதாலும் உடல் உழைப்பானது குறைந்து கலோரியானது எரிக்கப்படாமல் உடலில் கொழுப்பாக தேங்கிவிடுகிறது.

இயந்திரமயமான இன்றைய வாழ்கையில் ஃபாஸ்ட்புட் என்னும் துரித உணவுகளினாலும், எந்நேரமும் நொருக்குதீனி திண்பதினாலும், வெளியினல் செல்லும்போது அடிக்கடி ரெஸ்டாரண்டுகளில் கண்டகண்ட உணவுகளை அதிக அளவு சாப்பிடுவதாலும் உடல் எடை கூடிவிடுகிறது.

உடல் குண்டாவதற்கு மனதும் ஒரு காரணம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். "நாம் சந்தோசமாகவோ அல்லது துக்கமாகவோ  இருக்கும் பொழுது ஏதேனும் நொருக்குதீனி சாப்பிட்டால் நாம் அந்த எண்ணங்களின் நினைவிலையே அதிகளவு திண்றுவிடுகிறோம்.  மேலும் உடல் எடை கூடுவது உடனடியாகவோ அல்லது ஓரிரு நாட்களிலோ ஏற்படுவதிலை. அதனால் நாம் எதை சாப்பிடும்போதும் இதனை சாப்பிட்டால் ஒன்றும் எடை கூடிவிடாது என்ற எண்ணத்தில் எப்பொழுதும் சாப்பிடுவதால் நம்மை அறியாமலே உடல் பருமணாகிவிடுகின்றது" என்கின்றனர்.     

உடல் எடையை குறைக்க சில வழிகள்:

பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவை நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்பட்டு நம் உடல் உழைப்பிற்கு தகுந்தாற் போல் எரிக்கப்படுகிறது. அவ்வாறு எரிக்கப்பட்டது போக மீதம் இருக்கும் கலோரிகள் நம் உடலின் வயிறு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.  இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி தந்தாலே போதும் தசைத் திசுக்கள் அதிகரிக்கும். இதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும்.

உடற்பயிற்சி இல்லாததால் உடற்பருமன் ஏற்பட்டிருந்தால் நடத்தல், நீந்துதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.

நடைபயிற்சியே சிறந்த ஒன்று தான். 15 நிமிடங்கள் நடந்தாலே போதும் சுமார் 60 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் காலைப் பொழுதில் நடந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்பு விரைவில் எரிக்கப்படும். பின்பு அதனையே 30, 40 நிமிடங்கள் என்று அதிகப்படுத்தி காலை, மாலை என இருவேளைகளிலும் தொடரலாம்

நேரத்திற்குச் சாப்பிடுவது முக்கியமானது. ஒரே நேரத்தில் அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, அவ்வ‌ப்போது சாப்பிட்டால் கொழுப்பு தேங்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. இவ்வாறு சிறுகச் சிறுகச் சாப்பிடுவதால் ‌ஜீரண‌மஎ‌ளி‌தி‌லநட‌ந்தஉடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

சாப்பிட்டவுடன் படுத்துவிடாமல் சிறிது தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் ஜீரணத்திற்கு உதவியாகவும், காலையில் எழும்போது மந்தத்தன்மை இல்லாமலும் இருக்கும். கொழுப்பும் தேங்காது. நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது.

பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரிடம் பேசுவதென்றாலும் கூட செல்ஃபோனை எடுத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம். தோட்டம் இருந்தால் காலையிலோ மாலையிலோ சிறு சிறு வேலைகளைச் செய்யலாம்.

இதேபோல, பக்கத்தில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு நடந்து சென்று அவற்றை வாங்கி வரலாம். அலுவலகத்தில் லிஃப்டுகளைப் பயன்படுத்தாமல் படிகளின் மூலம் ஏறி இறங்குவதாலும் கூட தேக்கிவைக்கப்பட்ட கொழுப்பு வேகமாக எரிக்கப்பட்டு உடல் நலம் சீராகும்.

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் உடம்பில் கொழும்பபுச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடற்பருமனையும் தவிர்த்துவிடலாம்.

உடல் பருமனை குறைக்ககூடிய உணவுப்பொருட்கள்

உணவுப் பொருட்களை கொழுப்புச் சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான மாமிச வகைகள், வறுத்த உணவு, எண்ணெய்ப் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால் பொருட்கள், கிரீம்கள், இனிப்புப் பொருட்கள் போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும்

இவற்றை அதிகளவில் சாப்பிடும் போது தேவைக்கு அதிகமான கொழுப்பு சேர்த்து வைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.

நார்ச்சத்துப் பொருட்களில் இத்தகைய கொழும்புச் சத்துகள் குறைவாகவே இருக்கும். தவிர நார்ச்சத்துப் பொருட்கள் தேவையான சக்தியைத் தவிர மற்றவற்றை வெளியேற்றிவிடுகின்றன.

சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி போன்ற காய்கறிகள் செரிமாணம் ஆவதற்கு உடலில் இருந்தே ஆற்றலை எடுத்துக்குகொள்ளக்கூடியவை. மேலும் நார் சத்து அதிகமுள்ள காய்கறிகளான பீன்ஸ், அவரைக்காய் போன்றவை உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் மற்றும் கெட்ட கொழுப்பினை வெளியேற்றி உடல் எடை குறைப்பிற்கும் உடல் ஆரோக்கியத்த்ற்கும்
உதவுகின்றன.


கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.

கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.

மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.

மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

ஏலக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.
 
இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை டம்ளர் இளஞ்சூடான
வெந்நீருடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எழூமிச்சை சாறும் கலந்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் மூன்று அல்லது நான்கு கப் கிரீன் குடித்து வந்தால் உடலில் உள்ள

கொழுப்பு கரைந்து கனிசமான அளவு எடை குறைய வாய்ப்புண்டு.

இத்தகைய சிறுசிறு உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாட்டினையும் ஒரிரு நாட்களோ அல்லது ஒரு சில வாரங்களோ செய்து நிறுத்திவிடாமல் எப்பொழுதும் செய்து வந்தால்தான் உடல் பருமணின்றி கட்டுக்கோப்பாக பராமரிக்க முடியும்.

No comments:

Post a Comment